
சுங்கை பட்டாணி, ஜூலை 23 – இன்று, கெடா சுங்கை பட்டாணியிலுள்ள அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கடாரம் கொண்ட தமிழ்ப் பேரரசன் இராஜேந்திர சோழனுக்கு ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாள் பெருவிழா மிக விமரிசையாகவும் சிறப்பாகவும் நடந்தேறியுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ் தனேந்திரன் தலைமை விருந்தினராகவும் தமிழ்நாட்டின் தமிழ் சேவா சங்கத்தின் நிறுவனர் திரு. ஞானசரவணவேல் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்டு நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மன்னர் ராஜேந்திர சோழனின் சிலையை கட்டித் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாகவும் தற்போது அவரது பிறந்தநாளில் பங்கேற்றத்தில் மட்டற்ற மகிழ்ச்சி என்றும் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டத்தோ தனேந்திரன் அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட பேரரசரான ராஜேந்திரனின் குறிப்பிடத்தக்க மரபு பற்றிய நுண்ணறிவுகளையும், அவரது தலைமை பற்றியும், கடற்படை வலிமை மற்றும் நாகரிக அணுகலைப் பற்றியும் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விழாவில் பக்தர்கள், பட்டர்வொர்த் கங்காதரன் ஆலய தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் அனைவரும் கலந்துக்க கொண்டுள்ளனர்.
மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இத்தகைய அர்த்தமுள்ள மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்வை ஏற்பாடு செய்த கோயில் அறங்காவலர் மற்றும் MMSP துணைத் தலைவர் திரு. கே. குகேஸ்வரன், MMSP மாநிலத் தலைவரும் தேசிய பொருளாளருமான டத்தோ ஓ.ஜி. சண்முகம் மற்றும் கோயில் தலைவர் திரு. கிருஷ்ணன் ஆகியோருக்கு டத்தோ ஸ்ரீ தனேந்திரன் தனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டுள்ளார்.