Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் வாகனத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய ஆடவர் கைது

சுங்கை பட்டாணி, ஜனவரி 12 – சுங்கை பட்டாணி Taman Ria பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மீது சிவப்பு நிற திரவம் வீசியதாக சந்தேகிக்கப்படும் ஆடவனை போலீசார் கைது செய்து 4 நாட்கள் அதாவது வருகின்ற வியாழன் வரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

முன்னதாக, நேற்று இரவு Taman Ria பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மீது சிவப்பு திரவம் வீசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்புகாரைத் தொடர்ந்து அன்றே அச்சந்தேக கைது செய்யப்பட்டதாக குவாலா மூடா மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Hanyan Ramlan தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது தண்டனைச் சட்டம் மற்றும் மிரட்டல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!