கோலாலம்பூர், நவம்பர்-5 – சிரம்பான் நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் சுங்கை பீசி டோல் சாவடி தடுப்புச் சுவரை கார் மோதியதில், அதிலிருந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவ்விபத்து ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
டோல் தடுப்புச் சுவரை மோதியதில் நசுங்கிபோன Honda CRV காரின் முன்பகுதியில் சிக்குண்டு 65 வயது அவ்விருவரும் மரணமடைந்தனர்.
காரின் இடிபாடுகளிலிருந்து இருவரது உடல்களையும் வெளியே எடுத்த தீயணைப்புத் துறை, மேல் நடவடிக்கைக்காக அவற்றைப் போலீசிடம் ஒப்படைத்தது.