சுங்கை பூலோ, அக்டோபர்-19, சுங்கை பூலோ, Hillpark Saujana Utama-வில் உள்ள எண்ணெய் நிலையத்தில் பெண்ணொருவர் மூங்கில் கம்பால் சக வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், இன்னொரு கார் நகர முடியாத அளவுக்கு அந்த உள்ளூர் பெண் தனது பெரிய காரை நிறுத்தியிருந்தார்.
பாதிக்கப்பட்ட எண்ணெய் நிலைய வாடிக்கையாளர், காரை நகர்துமாறு கூறவே தலை முக்காடு அணிந்திருந்த அப்பெண் ஆவேசமடைந்தார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் சற்று நேரத்தில் காரிலிருந்து மூங்கில் கம்பை எடுத்து அடிக்கப் பாய்ந்தார்.
எனினும் எண்ணெய் நிலையப் பணியாளர்கள் அவரைத் தடுத்தி நிறுத்தினர்.
அச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் சுங்கை பூலோ போலீஸ், தகவல் தெரிந்த பொது மக்கள் விசாரணைக்கு உதவுமாறுக் கேட்டுக் கொண்டது.