சுபாங் ஜெயா, செப்டம்பர் -10 – சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 4 அருகேயுள்ள மசூதியில் 2 உண்டியல்களை உடைத்து 3,000 ரிங்கிட் பணத்தை திருடிச் சென்ற ஆடவனை போலீஸ் தேடி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உண்டியல்கள் உடைந்து போனது கண்டு மசூதியின் செயலாளர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸ் வந்து CCTV கேமரா பதிவைப் போட்டு பார்த்த போது, உணவு அனுப்பும் p-hailing ஓட்டுநர் ஒருவர் உண்டியைல்களை உடைத்துப் பணத்தைத் திருடுவது கண்டறியப்பட்டது.
அவ்விரு உண்டியல்களும், மசூதியின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக பொது மக்களிடம் நன்கொடை திரட்டுவதற்காக வாசல் கதவருகே வைக்கப்பட்டிருந்தன.
நீல நிற சட்டையில், சிவப்பு நிற ஹெல்மட் அணிந்து, ஆரஞ்சு நிற ‘Shopeefood’ பேக்கை முதுகில் கட்டியிருந்த ஆடவன், ஞாயிற்றுக்கிழமை காலை திருட்டு வேலையைப் பார்த்திருக்கிறான்.
அவனது சிவப்பு நிற Yamaha 135LC மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மட்டும் CCTV-யில் சரியாகத் தெரியவில்லை.
மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதோடு, சந்தேக நபருக்கும் போலீஸ் வலை வீசியுள்ளது.