
கோலாலம்பூர், ஜூலை 29 – சுபாங்கிலிருந்து பாங்காக்கிற்கு புதிய நேரடி அனைத்துலக விமானச் சேவையை பாத்திக் ஏர் நிறுவனம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இந்த வெற்றியினைக் கொண்டாடும் வகையில் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில், புதிய விமான வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
அதே நாளில் சுபாங் மற்றும் கூச்சிங்கிற்கு இடையிலான நேரடி விமானங்களையும் தொடங்கியுள்ளதாக பாத்திக் ஏர் நிறுவனம்.
பாங்காக் மற்றும் கூச்சிங்கிற்கு தற்போது சுபாங்கிலிருந்து ஐந்து நேரடி விமானங்களை பாத்திக் வழங்குகின்றது என்றும், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு சிறந்த தேர்வாக அமையுமென பாத்தேக் ஏர் நம்புகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு மாற்றாக பயணிகளுக்கு மேம்பட்ட வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம், சுபாங் வழியாக இணைப்பை விரிவுபடுத்துவதில் விமான நிறுவனம் பெருமை கொள்கிறது என்று பாத்திக் ஏர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி கூறியுள்ளார்.