
கோலாலம்பூர், பிப்ரவரி-9-கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், ஆப்பிரிக்க விலைமாதர்கள் 11 பேர் கைதாகினர்.
இரு வாரங்களாக உளவுப்பார்த்தப் பிறகு, குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறையான JSJ விடியற்காலை 2 மணிக்கு சோதனையைத் தொடங்கியது.
கானா (Ghana), உகாண்டா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அப்பெண்கள் சுற்றுப்பயணிகள் போர்வையில் மலேசியா வந்துள்ளனர்.
எனினும் கடந்த ஒரு மாதமாக புக்கிட் பிந்தாங் கடைவீதிகளில் முகாமிட்டு, அங்குள்ள கேளிக்கை மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை இவர்கள் குறி வைத்துள்ளனர்.
இணங்கியவர்களை, அருகிலுள்ள பட்ஜெட் ஹோட்டல்களுக்கோ அல்லது வேறு மறைவிடங்களுக்ளோ அழைத்துச் சென்று
200 ரிங்கிட் கட்டணத்தில் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
என்றாலும், இப்பெண்களின் பின்னால் விபச்சார கும்பல் ஏதும் இல்லை; தனியாகவே இவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டுள்ளதாக JSJ அறிக்கையொன்றில் கூறியது.
20 முதல் 30 வயதிலான 111 பெண்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



