
சுல்தான் அப்துல் ஹலிமை முவாட்ஷாம் பாலத்தில் வார இறுதியில் 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு
பத்து காவான்,பிப்ரவரி-12,
எதிர்வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பினாங்கு சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஷாம் பாலத்தில் 50 விழுக்காடு டோல் கட்டணம் கழிவு வழங்கப்படும் என Jambatan Kedua Sdn Bhd அறிவித்துள்ளது. Class 1 எனப்படும் முதல் பிரிவு வாகனங்களுக்கு டோல் கட்டணம் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 ஆம்தேதி சனிக்கிழமை அதிகாலை மணி 12.01 முதல் பிப்ரவரி 15ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மணி 11.59 வரை டோல் கழிவு அமலில் இருக்கும் என இன்று முகநூலில் பதிவிடப்பட்ட அறிக்கையில் Jambatan Kedua Sdn Bhd தெரிவித்துள்ளது.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவ வழங்க இதற்கு முன் அமைச்சரவை ஒப்புக்கொண்டது. இந்தத் கழிவு அனைத்து டோல் சாவடிகளிலும் முதல் பிரிவு தனியார் வாகனங்களுக்கும், பினாங்கு பாலத்தில் 2 ஆம் பிரிவுக்கான வாகனங்களுக்கும் பொருந்தும் .
ஆனால் நாட்டின் எல்லைகளில் உள்ள அதாவது வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் விரைவுச் சாலையில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் டோல் சாவடி மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பில் உள்ள Tanjung Kupang டோல் சாவடி ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



