
சபாக் பெர்ணாம், மார்ச்-12 – சிலாங்கூர், செகின்ச்சான், தாமான் ரியாவில் நேற்று மாலை புயல் காற்று வீசியதில் குறைந்தது 30 வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரணமாக ஸ்ரீ செகின்ச்சான் மண்டபத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக, மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.
அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கவும், பாதுகாப்பை உறுதிச் செய்ய அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ளவும் அரசு நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அப்பகுதி வாழ் மக்கள் விழிப்புடன் இருப்பதோடு அதிகாரத் தரப்பின் உத்தரவுகளைப் பின்பற்றி வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செகின்ச்சான் புயலில் கூரைகள் பறந்தது உள்ளிட்ட சேதாரங்களைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு புயல் வீசுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக மார்ச் 6-ஆம் தேதி கம்போங் பாரிட் எம்பாட்டில் வீசியப் புயலில் 8 வீடுகள் சேதமுற்றன.