மஞ்சோங், நவம்பர்-9,பேராக், செத்தியாவானில் 3 வீடுகளுக்கும் 4 வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வியட்நாமிய மாது விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
தாமான் சிங்காவில் உள்ள வீடமைப்புப் பகுதியில் நேற்று அதிகாலை அந்தச் சதிநாச வேலை நிகழ்ந்தது.
புகார்தாரரான 42 வயது ஆடவரின் வீட்டில் மோட்டார் வண்டி பழுது பார்க்குமிடத்தில் தொடங்கிய தீ, பின்னர் பக்கத்திலிருந்த 2 வீடுகளுக்கும் பரவியது.
அதில் உணவகப் பணியாளரான அவரின் வீடு 90 விழுக்காடு சேதமடைந்தது; தவிர அவரின் Proton X50, Perodua Myvi, Yamaha Ego மோட்டார் சைக்கிளும் தீயில் அழிந்தன.
பக்கத்து வீட்டில் Yamaha LC மோட்டா சைக்கிள் தீக்கிரையானது.
எனினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
CCTV கேமராவை பரிசோதித்ததில், மர்ம நபர் ஒருவர் எரிபொருள் அடங்கிய இரு தோம்புகளைப் புகார்தாரரின் வீட்டை நோக்கி எடுத்துச் செல்வது தெரிகிறது.
தீப்பற்றிக் கொண்டதும் அவர் தப்பியோடுவதையும் அதில் காண முடிகிறது.
இதையடுத்துத் துப்புத் துலங்கிய போலீஸ் 38 வயது அந்த வியட்நாமிய மாதுவைக் கைதுச் செய்து, அவருக்கும் சந்தேக நபருக்குமுண்டான உறவை விசாரித்து வருகிறது.