
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – கடந்த செவாய்க்கிழமை, செந்தூல் பாயிண்ட் சூட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள வேப் கடை ஒன்றில், SUV வாகனம் மோதி நுழைந்த சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அக்கடையின் வெளிப்புறத்தில் இருந்தவர்களில் சிலர் இச்சம்பவத்தை பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான காட்சி பதிவுகள் இருந்த போதும், SUV வாகனம் எவ்வாறு உள்ளே வந்தது என்பதனை தெளிவாகக் காண முடியவில்லை.
இந்நிலையில், காவல்துறை போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையினர் இவ்விபத்தில் எவ்வித உயிரிழப்பும், மற்றும் காயங்களும் ஏற்படவில்லையென்று உறுதிபதியுள்ளனர்.