
செந்தூல், ஏப்ரல்-22,கோலாலம்பூர், செந்தூல், பத்து மூடா PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுமி மரணமுற்றாள்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக, செந்தூல் போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஹ்மாட் சுகார்னோ மொஹமட் சஹாரி தெரிவித்தார்.
அச்சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை.
பக்கத்தில் CCTV கேமராக்களும் இல்லை.
இதையடுத்து தற்போதைக்கு திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும் மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக சுகார்னோ சொன்னார்.