
சிரம்பான், மார்ச் 7 – செனவாங் Matahari Height சமிக்ஞை விளக்கு சாலை சந்திப்பிற்கு அருகே ஜாலான் பெர்சியாரான் செனவாங் 1இல் (Jalan Persiaran Senawang 1) கார் ஒன்று இரண்டு மோட்டார்சைக்கிள்களை மோதிய விபத்தில் இருவர் மரணம் அடைந்ததோடு , மூவர் காயம் அடைந்தனர்.
நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் Modenas Kriss மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 15 வயது நபரும், பின்னால் அமர்ந்திருந்த 16 வயது இளைஞனும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் ( Mohamad Hatta Che Din ) தெரிவித்தார்.
செனவாங்கிலிருந்து பாரோய்யை நோக்கி 17 வயது பயணியுடன் 18 வயதுடைய இளைஞர் Honda Jazz காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
எச்சரிக்கை விளக்குப் பகுதியில் Honda Jazz கார் நிற்காமல் சென்றதால் இடது புறத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்களை மோதியது.
இதனைத் தொடர்ந்து Modenas Kriss மோட்டார்சைக்கிளை ஓட்டியவரும் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இறந்தனர்.
இந்த விபத்தில் Honda Jazz காரை ஓட்டியவர், Honda Vario மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் அதன் பின்னால் அமர்ந்திருந்த நபரும் காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து சிரம்பான் Tuanku Ja’afar மருத்துவமனைக் கொண்டுச் செல்லப்பட்டனர்.