
கோத்தா பாரு, டிசம்பர்-17, கிளந்தான், பாசீர் பூத்தேவில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்டதாக, மளிகைக் கடைப் பணியாளர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
கடந்த மாதம் மற்றும் இம்மாதத் தொடக்கத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததை, 24 வயது Zulhairie Zulkifli ஒப்புக் கொண்டான்.
முதல் குற்றச்சாட்டின் படி, 18 வயது பெண்ணின் பணப்பையிலிருந்து அவன் ரொக்கப் பணத்தைத் திருடியுள்ளான்.
டிசம்பர் 2-ம் தேதி பிற்பகலில் பாசீர் பூத்தே, சுங்கை பெத்தாயில் உள்ள மளிகைக் கடையொன்றில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
நவம்பர் 6-ஆம் தேதி மற்றொரு மளிகைக் கடையின் கல்லாப்பெட்டியில், 26 வயது பெண்ணிடம் கத்திமுனையில் 400 ரிங்கிட்டை அவன் கொள்ளையிட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறையுடன், அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 392 மற்றும் 397-வது பிரிவுகளின் கீழ் அவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
குற்றவாளிக்கு ஜனவரி 19-ல் தண்டனை அறிவிக்கப்படுமென நீதிபதி தெரிவித்தார்.