
பினாங்கு, அக்டோபர் 21 – பினாங்கு, செபராங் பிறையில், தடைசெய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்திய டொயோட்ட வியோஸ் (Toyota Vios) கார் உரிமையாளர், எதிர்பாராத ஒரு தாக்குதலை எதிர்நோக்கியுள்ளார்.
தவறாகத் தடைசெய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த சக குடியிருப்பாளர்கள் அவரின் காரை குப்பை லாரியாக மாற்றிவிட்டனர்.
Seaview அடுக்குமாடிக் குடியிருப்பின், குப்பை கொட்டும் இடத்தின் நுழைவாயிலுக்கு இடையூறாக, அந்த டொயோட்ட வியோஸ் (Toyota Vios) கார் உரிமையாளர் தவறாக வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில், காரின் பக்கவாட்டில் பெரிய குப்பை தொட்டியும், சுற்றிலும் குப்பை பைகள், தேவையற்ற மெத்தை ஆகியவையும் குவித்து, அந்த குடியிருப்பாளர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தினால், இப்படிதான் விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று மற்றவர்களை எச்சரிக்கும் விதமாகப் பதிவேற்றப்பட்ட இந்த குப்பையால் மூடப்பட்ட வாகனத்தின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.