செப்டம்பர் 22 முதல் JB சோதனைச் சாவடிகளில் சிங்கப்பூரியர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்

ஜோகூர் பாரு, செப்டம்பர்-18,
வரும் செப்டம்பர் 22 முதல், சிங்கப்பூரியர்கள் கடப்பிதழ் இல்லாமல் QR குறியீட்டை மட்டுமே பயன்படுத்தி ஜோகூர் பாருவில் குடிநுழைவுச் சோதனையை கடக்க முடியும்.
இது மலேசியாவின் புதிய தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையான MyNIISe (pronounced “my nice” ) சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இச்சோதனை 2026 பிப்ரவரி வரை ஜோகூர் பாருவின் இரு நிலச் சாவடிகளில் நடைபெறுகிறது.
பின்னர், கோலாலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் உட்பட, மலேசியாவின் 5 விமான நிலையங்களிலும் விரிவாக்கப்படும்.
MyNIISe பயன்பாடு, பயணிகள் குழுவாக ஒரே QR குறியீட்டின் மூலம் குடிநுழைவுச் சோதனையை எளிதாக கடக்க உதவுகிறது.
இது தற்போது பயன்படுத்தப்படும் MyBorderPass-சை விட மேம்பட்டதாகும்.
மேலும், எதிர்கால ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS இணைப்புத் திட்டத்திலும் இது பயன்படுத்தப்படும்.
தற்போது, ஜோகூர் பாருவில் 27 முகப்புகளும், இரண்டாவது ஜோகூர் பாலத்தில் 24 முகப்புகளும் MyNIISe-க்கு பொருத்தப்பட்டுள்ளன.
இந்தச் செயலியை Apple App Store, Google Play Store மற்றும் Huawei App Gallery-இல் பதிவிறக்கம் செய்யலாம்.