Latestமலேசியா

செப்டம்பர் 3-7 வரை ஜோகூர் சுத்தரா மாலில் ‘Colours of India’-வின் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் & பிரமாண்ட வர்த்தக கண்காட்சி நிகழ்வு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 25 – வருகின்ற செப்டம்பர் 3 முதல் 7 ஆம் தேதி வரை ஜோகூர் பாரு ‘சுத்தரா மால்’ மண்டபத்தில், மலேசியாவின் முதல் நிலை இந்திய விற்பனை கண்காட்சி நிறுவனமான கலர்ஸ் ஆப் இந்தியா (Colours of India), தென்கிழக்காசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பிரமாண்ட வர்த்தக கண்காட்சி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இது Colours of Indiaவின், 2025 ஆம் ஆண்டிற்கான முதல் மிக பெரிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் கண்காட்சி நிகழ்வாகும்.

மக்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் எப்போதும் போல இந்தக் கண்காட்சியில் உணவு, ஆடைகள், வீட்டு உபகரணங்கள், பூஜை தளவாட பொருட்கள், அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய 200 க்கும் மேற்பட்ட இந்திய வணிகக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சியில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் மக்களின் வசதிக்காக மலிவு விலையில் வழங்கப்படவுள்ளது.

இம்முறை பல்வேறான மனதைக் கவரும் இசை கச்சேரிகளோடு உள்ளூர் கலைஞர்களான டார்க்கி, krish k, Balan Kash, வெளியூர் கலைஞர்களான சிறகடிக்க ஆசை முத்து, ரவி குமார், மீனா, சின்ன மருமகள் சேது, சமூக ஊடக பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மேலும் கலைக்கட்டவுள்ளது இந்த விற்பனை கண்காட்சி.

அவர்களோடு, இந்த கண்காட்சியில் வணக்கம் மலேசியாவும் ஒரு அங்கமாக இடம்பெறுவதோடு ஜோகூர் மக்களை நேரடியாக பார்க்க அங்கு களம் இறங்குகிறது.

மிக பெரிய அளவில் நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சி நிகழ்விற்கு மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென Colours of India நிர்வாகத்தினர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல இடங்களில் இந்த விற்பனை கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் Colours of India வர்த்தகர்களுக்கு விற்பனைக்கான தளத்தையும் புதிய சந்தை விரிவாக்கத்திற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!