
காஜாங், செப்டம்பர் 5 – நேற்றிரவு, செமிஞ்ஞேயிலுள்ள வீடொன்றின் கூரை மீது ஏறி, வீட்டினுள் நுழைய முயற்சித்த 48 வயது நபரை, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.
பொதுமக்கள் அளித்தபுகாரைத் தொடர்ந்து போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று கஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஜைத் ஹாசன் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சந்தேக நபர் சம்பவத்தின்போது வெறும் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தான் என்றும் கைது செய்யப்பட்டபோது அவனிடமிருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அறியப்படுகின்றது. இந்நிலையில் அந்த ஆடவன் தற்போது கஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான்.
மேலும், அந்நபருக்கு போதைப்பொருள் குற்றங்கள் உட்பட சுமார் 26 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆறு மாத சிறை தண்டனையும், 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று அறியப்படுகின்றது.