
கோலாலம்பூர், ஜூலை 31 – செராஸ் Bandar Sri Permaisuri அடுக்ககத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 7 மாத பெண் குழந்தை, உடலில் சிராய்ப்பு காயங்கள் மற்றும் நீல நிறத்துடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து இறந்தது.
இரவு 9.34 மணியளவில் ஆடவர் ஒருவரிடமிருந்து இது குறித்து புகாரைப் பெற்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசுப் ஜான் முகமட் ( Mohamed Usuf Jan Mohamad ) உறுதிப்படுத்தினார். தனது வளர்ப்பு மகள் வீட்டில் மயங்கிக் கிடந்ததற்கான காரணம் தெரியவில்லையென அந்த ஆடவர் கூறியிருந்தார்.
அவ்வீட்டிற்குள் சென்ற போலீசார் அங்குள்ள அறையில் குழந்தையின் உடலில் சிராய்ப்பு காயங்கள் மற்றும் அதன் தோள் நீல நிறத்தில் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) யின் கீழ் குழந்தை துன்புறுத்தல் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதோடு அக்குழந்தையின் வளர்ப்பு பெற்றோரான 38 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேகப் பேர்வழிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.