
கோலாலம்பூர், மார்ச் 13 – கோலாலம்பூர், கம்போங் செராஸ் பாருவில் உள்ள கோழி அறுக்கும் கடைகள் அசுத்தமான நிலையில் இருந்ததை தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன.
அங்கு துர்நாற்றம் வீசுவதும், கோழிகள் தரைகளில் சுத்தமில்லாத சூழலில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உள்நாட்டு வாணிப மற்றும் பயணீட்டாளர் அமைச்சின் அதிகாரிகள், ஜாகிமின் ஹாலால் உணவு பாதுகாப்புத் துறை, குடிநுழைவுத் துறை ஆகியவை இன்று காலை மேற்கொண்ட திடிர் நடவடிக்கையில் இந்த அசுத்தமான சூழலில் உள்ள கடைகள் அம்பலமாகின.
இந்த திடிர் சோதனையில் 3200 கிலோ கிராம் எடையிலான 27,938 ரிங்கிட் மதிப்பிலான கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயத்தில் 26 இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 வாரக் கால கண்காணிப்பிற்குப் பிறகு இந்த திடீர் சோதனை மொத்தம் 4 கடைகளில் நடத்தப்பட்டன. அதில் 2 கடைகள் முறையாக பதியப்பட்ட கடைகள் மற்றும் மேலும் 2 சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.