Latestமலேசியா

செருப்புக்களை மீட்பதற்காக குற்றச் செயல் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற நபருக்கு 4 நாள் தடுப்புக் காவல்

பாலேக் பூலாவ், ஆக 5 – TikTok influencer ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக 21 வயது இளைஞர் ஒருவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் Chia Huey Ting இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கு முன் அந்த சந்தேக நபர் காலை மணி 9.05 அளவில் Balik Pulau நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று Batu Maungகில் ஒரு வீட்டிற்குள் புகுந்த அந்த சந்தேகப் பேர்வழி , தான் விட்டுச் சென்ற செருப்பை மீட்டெடுக்க சம்பவ இடத்திற்குத் சென்றபோது பிடிபட்டார்.

Amigos Media viral என்ற முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் இந்த விவகாரம் அப்பலமானதாக பினாங்கு தென்மேற்கு போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Sazalee Adam தெரிவித்தார்.

அவ்வீட்டின் வேலையாள் வெளியே குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் பின் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் அவ்வீட்டில் டிக்டோக் செய்பவர் இருப்பதை உணர்ந்ததும், சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதன்பிறகு அந்நபர் தான் விட்டுச் சென்ற செருப்பை தேடி எடுக்க வந்தபோது புகார்தாரரும் பல நண்பர்களும் அந்நபரை பிடித்து Batu Maungகில் பணியில் இருந்த ரோந்துப் பிரிவின் உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!