
கோலாலம்பூர், மார்ச் 10 – மிகவும் அபூர்வாக நடைபெறும் சேலை அணிந்து போலிங் போட்டி முதல் முறையாக மார்ச் 8ஆம் தேதி சன்வே பிரமிட் மேக லென்ஸ்சில் தொடங்கியது.
இப்போட்டியில் பாரம்பரிய சேலை அணிந்து 60 முதல் 70 பெண்கள் கலந்துகொண்டனர்.
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே விளையாட்டுத்துறையில் குறிப்பாக போலீங் விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்போட்டி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகவும், ஸ்பான்சர்களாகவும் கீத்தாஞ்சலி ஜீ, நிர்வாக அதிகாரி, டி.எஸ்.ஜி கிரியேஷன் மற்றும் டிவி 2 தமிழ் செய்தி வாசிப்பாளர் லோகேஸ்வரி சண்முகம், டாக்டர் விமலா பெருமாள் மற்றும் திரு. தினேஷ் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
இது ஒரு இயக்கம் என்பதோடு அனத்துலக மகளிர் தினத்துடன் இணைந்து செய்யப்பட்ட இந்த முயற்சி, சேலை என்பது ஒரு பாரம்பரிய உடை மட்டுமல்ல, வலிமை, கருணை மற்றும் பல்துறைத்திறனைக் குறிக்கும் ஒரு வாழ்க்கை முறை அறிக்கை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அக்டோபர் 2024 இல் ஐந்து ஆர்வமுள்ள நபர்களால் நிறுவப்பட்ட பாவாய் லூம்ஸ் எம்பயர் (Paavai Looms Empire) , நவீன பெண்களுக்கான அன்றாட உடையாக சேலையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் மறுவரையறை செய்யவும் உறுதிபூண்டுள்ளது.