Latestஉலகம்

உலகளவில் எக்கச்சக்கமாக எகிறும் எலிகளின் எண்ணிக்கை; காரணம் காலநிலை மாற்றமா?

வாஷிங்டன், செப்டம்பர்-27,

லண்டன் முதல் வாஷிங்டன் வரை டொரோண்டோ முதல் ஆம்ஸ்டர்டாம் வரை — உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது.

Science Advances இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், நகர எலி நிபுணர் Dr Bobby Corrigon, வட அமெரிக்காவைச் சேர்ந்த 16 நகரங்களை ஆய்வு செய்தார்.

அதில் 11 நகரங்களில் எலிகளின் எண்ணிக்கை கடந்த 7 முதல் 17 ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளன.

தலைநகர் வாஷிங்டனில் 400%, சான் ஃபிரான்சிஸ்கோவில் 300%, டொரோண்டோவில் 180%, நியூ யோர்க்கில் 160% என எலி தொகை பெருக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் எலி எண்ணிக்கை 1 கோடி முதல் 12 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தோக்யோ, நியூ ஓர்லியன்ஸ் உள்ளிட்ட சில.நகரங்களில் மட்டுமே எலிகளின் எண்ணிக்கைக் குறைவாகப் குறைவாகியுள்ளது.

ஆய்வில், வெப்பநிலை உயர்ந்த நகரங்களில் எலிகள் அதிகரிப்பு தெளிவாகக் காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் உயர்ந்துள்ளது.

உலகளவில் வெப்பநிலை 2100-ஆம் ஆண்டுக்குள் 1.9 முதல் 2.7 பாகை செல்சியஸ் வரை உயரும் என்று Climate Action Tracker எச்சரிக்கிறது.

இது எலி எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மேலும், நகரங்களில் குப்பை அதிகரிப்பு, துரித உணவுப் பழக்கம், குப்பை சேகரிப்பில் தாமதம், சாலைகள் மற்றும் கட்டடப் பணிகளால் கழிவுநீர் பாதைகள் பாதிக்கப்படுதல் போன்றவையும் எலிகள் பெருகுவதற்குக் காரணம்.

எலியின் சிறுநீரிலிருந்து பரவும் leptospirosis, hantavirus போன்ற ஆபத்தான நோய்களை பரப்புவதால், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியமாவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!