போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, சொக்சோ இழப்பீடு கோரப்பட்ட மோசடி தொடர்பில் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட மூவர் விசாரணைகளுக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் எலும்பு நிபுணர்கள், மற்றொருவர் ‘வாடிக்கையாளர்களை’ தேடும் ஏஜெண்ட் ஆவார்.
இரு மருத்துவர்களும் செபராங் ஜெயாவில் உள்ள அரசாங்க மருத்துவமனையொன்றில் பணிபுரிகின்றனர்.
இதையடுத்து, இயலாமைக்கான சொக்சோ இழப்பீடு கோரி போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட மோசடி தொடர்பில் இதுவரை மொத்தமாக 36 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் ஐவர் எலும்பு மருத்துவர்கள் ஆவர்.
அடுத்தடுத்து மேலும் பலர் கைதாகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என மலேசிய ஊழல் தடுப்பாணையம் MACC கூறியது.