
பினாங்கு, அக்டோபர்-7,
நாட்டில் ரியல் எஸ்டேட் எனப்படும் சொத்துடைமை தொழில்துறை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி, தொழில் வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதில் முன்னணி வகிப்பது தான் Elite Top Notch அமைப்பாகும்.
AG Sasidar தலைமையில் அவ்வமைப்பு, உறுப்பினர்களுக்கான ஊக்கப் பயணங்கள் மற்றும் சமூக ஊடக இருப்பு ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறது.
இந்நிலையில் சொத்துடைமை தொழில்துறையில் இந்தியர்களும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் பயிற்சிகளை அது நடத்தி வருகிறது.
அவ்வகையில் கடந்த ஞாயிறன்று பினாங்கில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக Sasidar வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இதற்கு முன் கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலும் மகத்தான வரவேற்பு கிடைத்ததாக அவர் சொன்னார்.
ஒரு காலத்தில் சொத்துடைமைகளை வாங்கிப் போடுவதில் மிகவும் பின்தங்கியிருந்த இந்தியர்கள் தற்போது அந்தத் தொழில்துறையிலேயே முன்னேறியிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சொத்துடைமைத் துறையில் இந்தியர்களின் பங்கு உயர வேண்டுமென்றால், அவர்களின் பங்கேற்பும் முதலீடும் முக்கியம் என்ற கருத்தும் இப்பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது.