Latestமலேசியா

சொந்த ஆபாச படத்தைத் தயாரித்து விற்பதா? அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் மீது MCMC விசாரணை

கோலாலம்பூர், நவம்பர்-14 – அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தானே தோன்றும் ஆபாச வீடியோக்களைத் தயாரித்து X தளத்தில் அவற்றை விற்று வருவது அம்பலமாகியுள்ளது.

பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அணுக்கமாகக் கண்காணித்தும், உளவுப் பார்த்தும் அம்மாணவரின் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதை, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையம் MCMC உறுதிப்படுத்தியது.

2021-ஆம் ஆண்டில் ‘அவ்வேலையைத்’ தொடங்கிய மாணவர் முதலில் X தளத்தில் மற்றவர்களின் ஆபாச வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து வந்துள்ளார்.

பிறகு, தனக்கு அறிமுகமான பெண்ணுடன் தான் உடலுறவுக் கொள்வதை வீடியோவாக எடுத்து X தளத்தில் விற்று அவர் காசு பார்த்து வந்துள்ளார்.

ஒரு வீடியோவுக்கு 150 ரிங்கிட் என்ற விகிதத்தில் மாதந்தோறும் 3,000 ரிங்கிட்டை அவர் சம்பாதிக்கிறார்.

அம்மாணவரின் கைப்பேசி, சிம் அட்டை ஆகியவையும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்விளைஞனின் தோழியான தனியார் உயர் கல்விக் கூட மாணவியிடமும் MCMC விசாரணை நடத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!