
ஷா அலாம், ஜன 6 – தனது நிறுவனத்திற்கு சொந்தமாக குப்பை லோரி ஒன்று சோதனையை தவிர்க்க முயன்றபோது கால்வாயில் கவிழ்ந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை திடப் பொருள் அகற்றும் நிறுவனமான KDEB மறுத்தது.
நேற்று மாலை சம்பந்தப்பட்ட லோரி விபத்துக்குள்ளானதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது. சம்பவம் நடந்த நேரத்தில், திடக் கழிவு பொருட்கள் சேகரிப்பு பணிகளை முடித்த பிறகு அதனை அகற்றுவதற்காக அந்த லோரி குப்பை கொட்டும் மையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அந்த லோரி சாலையிலிருந்து சறுக்கி கால்வாயில் விழுந்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சாலை நிலைமையும் காரணமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியங்களையும் நிர்வாகம் மேற்கொண்டுவரும் விசாரணையில் ஆராயப்பட்டு வருவதாக KDEB நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இழுவை சேவை நிறுவனத்தின் உதவியுடன் கால்வாயிலிருந்து லோரி வெற்றிகரமாக வெளியே இழுக்கப்பட்டு பழுதுபார்க்கும் பட்டறைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.



