
புத்ராஜெயா, செப்டம்பர் 17 – சரவாக்கிலுள்ள 1.25 பில்லியன் ரிங்கிட் சோலார் ஹைபிரிட் ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி டத்தோ ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த டத்தோ முகமட் ஸைனி மஸ்லான் பாகுபாடின்றி தீர்ப்பளிக்க முடியாது என்ற அடிப்படையில் அவரை விலக்க ரோஸ்மா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் மூவர் கொண்ட நீதிபதி குழு, அவர் கூறிய காரணங்களுக்கு ஆதாரம் இல்லை என்று தீர்மானித்து இம்முடிவை எடுத்துள்ளது.
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ரோஸ்மாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 970 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது வழக்கறிஞர், இந்த முடிவுக்கு எதிராக கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.