Latestஉலகம்

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு; ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்

சென்னை, ஏப்ரல்-12-நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், உச்ச நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலகநாயகன் கமல்ஹாசனும் அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

திரையீட்டுக்கு முன்பே ஒரு முழுப் படமும் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடித்து அரசாங்கம் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டுமென்றார்.

இவ்வேளையில், இச்சம்பவம் சாதாரண தவறல்ல; இது ஒரு அமைப்புசார் தோல்வியை வெளிப்படுத்துகிறது.குறிப்பாக, தாமதமான தணிக்கைச் சான்றிதழ் நடைமுறைகள் போன்ற காரணங்கள் இந்த கள்ளப் பதிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

அரசியலில் நுழைந்துள்ள விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைப் பிரச்சனையால் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அதன் 5 நிமிடக் காட்சிகள் முதலில் கசிந்த நிலையில், பின்னர் முழுப் படமும் HD உயர் தரத்தில் இணையத்தில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது, திரையுலகப் பிரபலங்களும் ஒன்றிணைந்து, கள்ளப் பதிப்பு கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!