Latestமலேசியா

ஜனவரி 1 முதல் திரெங்கானுவின் புகழ்பெற்ற பாலத்தில் கனரக வாகனங்களுக்கு தடை

கோலாலம்பூர், டிச 16 – ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோலாத் திரெங்கானுவின் சின்னமான டிராபிரிட்ஜ் ( Drawbridge ) பாலத்தை பயன்படுத்த கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும்.

3.5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள வாகனங்கள் மட்டுமே அந்த பாலத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படும். லோரிகள் , டிரெய்லர்கள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் போன்ற ஐந்து டன் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள கனரக வாகனங்களைத் தடுக்க உயரக் கட்டுப்பாட்டுத் தடை நிர்மாணிக்கப்படும் என்று
Ti Properties Sdn Bhd தலைமை நிர்வாக அதிகாரி அவாசி முகமட்
(Awasi Mohamad ) தெரிவித்தார்.

மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தெரெங்கானுவின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் அடையாளமான பாலத்தின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலம் பாதிக்கப்படால் இருப்பதை தடுக்கவும் , அதிக சுமை கொண்ட வாகனங்களால் கட்டமைப்புக்கு சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை முக்கியமாகும் என Awasi குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!