Latestமலேசியா

ஜனவரி 15 முதல் MyNIISe பயன்பாட்டுக்கு MyDigital ID அவசியம்

புத்ராஜெயா, ஜனவரி 7 – மலேசியர்கள், தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பான MyNIISe-இன் கைப்பேசி செயலி பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கு, ஜனவரி 15 முதல் MyDigital ID கட்டாயம் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், MyDigital ID, MyNIISe-க்கு ஒரே உள்நுழைவு முறை அதாவது Single Sign-On அடிப்படையில் செயல்படும் என்றும், வெளிநாட்டு பயணிகள் தற்போதுள்ள உள்நுழைவு முறையையே தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை, NIISe திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் தேசிய பதிவுத்துறையான JPN தரவுத்தளத்தை பயன்படுத்தி பயனர்களின் அடையாளம் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் சரிபார்க்கப்படும். அதே நேரத்தில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படாது என்றும் இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள், MyNIISe பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன் MyDigital ID செயலியை Apple App Store, Google Play மற்றும் Huawei AppGallery-இல் இருந்து பதிவிறக்கம் செய்து பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

MyNIISe செயலி கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று ஜோகூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அடுத்த கட்டமாக KLIA Terminal 1 மற்றும் 2, Bayan Lepas, Kuching மற்றும் Kota Kinabalu விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!