
ஜப்பான், நவம்பர் 8 – ஜப்பானில் கரடி தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்துள்ளன. ஜப்பான் வடக்கு மாகாணாத்தில் சமீப மாதங்களில் பலர் கரடி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்று அறியப்படுகின்றது.
இவ்வாண்டில் மரணங்கள் கடந்த ஆண்டை விட இரட்டிப்பு அளவிற்கு உயர்ந்துள்ளன என்றும், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் கூறப்பட்டது.
உணவு பற்றாக்குறை மற்றும் மலைப்பகுதிகளில் அதிகமான கரடிகள் பெருகியிருப்பதுதான் இந்த தாக்குதல்களுக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் காட்டில் acorn பழங்கள் இவ்வாண்டு மிக குறைவாக இருப்பதால், பசியால் வாடும் கரடிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்குகின்றன.
இந்நிலையில் ஜப்பான் அரசு ராணுவத்தினர் உதவியுடன் கரடிகளை பிடிக்கும் மற்றும் சுடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



