
டோக்கியோ, ஆகஸ்ட் 5 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில், கோடை விழா நிகழ்ச்சியின் போது, பட்டாசுகள் நிரப்பப்பட்ட இரண்டு படகுகள் தீப்பிடித்து எரிந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்
கடலில் குதித்த ஐவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர் என்றும் ஐவரில் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் உள்ளூர் ஊடகம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் கோடை பாரம்பரிய நிகழ்ச்சியில் பட்டாசு ஒரு முக்கிய பங்கை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து தரப்பு மக்களும் இவ்விழாவில் ஈர்க்கப்பட்டு “யுகாட்டா” என்று அழைக்கப்படும் கோடை கிமோனோ ஆடைகளை அணிவது வழக்கம்.