
புது டெல்லி, டிசம்பர்-31 – 4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியுடன் ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
இந்திய அரசாங்கமே இந்த வரலாற்றுப் பூர்வ சாதனையை அறிவித்துள்ளது.
வலுவான உள்நாட்டு தேவை, உலக சந்தை சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை இந்த வியத்தகு முன்னேற்றத்திற்கு காரணம்.
அண்மையக் காலாண்டில் கூட 8.2 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுச் செய்து, இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார சக்தியாக உள்ளதாக புது டெல்லி கூறிற்று.
உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய 3 நாடுகளும் முன்னிலையில் உள்ளன.
ஆனால், இதே வளர்ச்சி நீடித்தால் ஜெர்மனியையும் முந்தி, 2030-க்குள் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
140 கோடி மக்களைக் கொண்ட நாட்டுக்கு இது பெரும் கௌரவமாகும்.
உலக அரங்கில் இந்தியாவின் சக்தி, கனவு, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.



