ஜப்பான் ஏலத்தில் ஒரே ஒரு Tuna மீன் 510 மில்லியன் யென்னுக்கு விற்பனையாகியுள்ளது.

ஜப்பான் ஏலத்தில் ஒரே ஒரு Tuna மீன் 510 மில்லியன் யென்னுக்கு விற்பனையாகியுள்ளது.
டோக்கியோ, ஜனவரி 5 – ஜப்பான் டோக்கியோ மீன் சந்தையில் நடைபெற்ற புத்தாண்டு ஏலத்தில், ஒரே ஒரு ‘bluefin tuna’ வகை மீன் 510 மில்லியன் யென் அதாவது சுமார் 3.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இதுவரை பதிவான மிக உயர்ந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.
243 கிலோ எடையுள்ள இந்த Tuna வகை மீனை, ஜப்பானின் பிரபல sushi உணவகம் வாங்கியுள்ளது. இந்த விலை, 2019 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
Sushi நிறுவனத்தின் தலைவர், இந்த ஏலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல நம்பிக்கையை தரும் என தெரிவித்தார். ஏலத் தொகை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த Tuna மீன் Sushi உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு, வழக்கமான விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.



