
ஜாசின், டிசம்பர்-10, மலாக்கா, ஜாசின், மெர்லிமாவில் பராமரிப்பாளரின் வீட்டில் போர்வைக்குள் மூச்சுத் திணறி 6 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திங்கட்கிழமை காலை அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலையில் புட்டியில் பால் கொடுத்து விட்டு, குழந்தைக்கு ஏப்பம் வந்ததும் அதனைத் தொட்டியில் தூங்க வைக்க முயன்றுள்ளார்.
ஆனால் குழந்தை தூங்காமல் அடம் பிடிக்க, அதனை கட்டிலில் படுக்கை வைத்துள்ளார்.
குழந்தை தூங்கியதும் சமையலறைக்குப் போனவர் சற்று நேரம் கழித்து வந்து பார்த்த போது, குழந்தையின் முகம் போர்வையால் மூடப்பட்டிருந்தது.
போர்வையை விலக்கிய போது, குழந்தையின் உதடு நீல நிறமாக மாறியிருந்து கண்டு பயத்தில் அதன் தாயுக்கு அழைத்து பராமரிப்பாளர் விவரத்தைச் சொல்லியுள்ளார்.
4 மாதங்களாக குழந்தையைப் அப்பராமரிப்பாளரிடம் அனுப்பி வருகிறோம்; இதுவரையில் ஒரு பிரச்னையும் வந்ததில்லை.
பராமரிப்பாளரை நாங்கள் பழி சொல்லவில்லை, இப்படி நடக்க வேண்டும் என்று இருந்துள்ளது என, 29 வயது தந்தை Nazrol Nizam Mohd Tahar கூறினார்.
சொந்தப் பிள்ளையைப் போல் தான் அவர் கவனித்து வந்ததாக நாஸ்ரோல் கூறினார்.
இவ்வேளையில் அச்சம்பவம் விசாரணையிலிருப்பதாக ஜாசின் மாவட்ட போலீஸ் கூறியது.