
ஜாசின், டிசம்பர்-9 – மலாக்கா, ஜாசின் அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக் கொண்டதில், அவற்றின் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் ஏற்பட்ட அவ்விபத்தில் பேருந்திலிருந்த 10 பயணிகளும் காயமின்றி தப்பினர்.
ஜோகூர், காம்பீரிலிருந்து (Gambir) அலோர் காஜாவுக்கு கால்நடைத் தீவனங்களை ஏற்றிச் சென்ற லாரி, ஜோகூர், லார்கினிலிருந்து (Larkin) நெகிரி செம்பிலான் சிரம்பான் சென்ற லாரியின் பின்னால் மோதியது.
அதில் 69 வயது லாரி ஓட்டுநருக்கு தலையிலும் கையிலும் காயமேற்பட்டது; 44 வயது விரைவுப் பேருந்து ஓட்டுநருக்கோ இரு கால்களிலும் வலி ஏற்பட்டு இருவருமே மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
10 பயணிகளும் மாற்று பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்ததாக ஜாசின் போலீஸ் கூறியது.



