Latestமலேசியா

ஜாசினில் SPM வாய்மொழித் தேர்வுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு மாணவர் பலி

ஜாசின், டிசம்பர்-4, மலாக்கா, ஜாசினில் SPM வாய்மொழி தேர்வுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணமடைந்தவர், டாங் அனும் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் படிவ மாணவர் Adib Irfan Mohd Nizam என அடையாளம் கூறப்பட்டது.

காலை 7.30 மணிக்கு பள்ளிக்குச் செல்லும் வழியில், அவரின் Yamaha LC 135 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, மெர்லிமாய், ஜாலான் கீலாங் பெராப்பியில் (Jalan Kilang Berapi) கல் சுவரில் மோதியது.

அதில் உடலில் படுகாயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே 17 வயது அம்மாணவர் மரணமடைந்தார்.

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!