
ஜார்ஜ் டவுன், ஜூலை 22 – நேற்று, ஜார்ஜ் டவுன் ஆயர் ஈத்தாமிலுள்ள பாயா தெருபோங் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து, மூச்சு திணறலினால் தவித்துக் கொண்டிருந்த 250 கிலோகிராம் எடையிலான பெண்ணொருவரை எட்டு தீயணைப்பு வீரர்கள் கீழ் தளத்திற்கு வெற்றிகரமாக இறக்கியுள்ளனர்.
மாற்றுத்திறனாளியான (OKU) அந்த 45 வயதான பெண், ஆஸ்துமா காரணமாக மூச்சுத் திணறலில் அவதியுற்றார் என்றும் லிஃப்ட் வசதி இல்லாததால் முன்னதாகவே அங்கு வந்திருந்த மருத்துவ பணியாளர்கள் அவரைக் கீழே கொண்டு செல்ல இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ குழுவினருக்கு உதவுவதற்காக அங்கு வந்திருந்த தீயணைப்பு துறையினர், அரை மயக்கத்திலிருந்த அப்பெண்ணை சுமார் 20 நிமிடத்தில் வெற்றிகரமாக கீழே கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர் என்று பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி முகமது சயாஃபிசானி முகமது ரோஸ்லி கூறியுள்ளார்.
பின்னர் அப்பெண் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அழைத்து செல்லப்பட்டார்.