
சைபர்ஜெயா, மார்ச்-29- MISI எனப்படும் மலேசிய இந்தியர் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் Acting in Film Programme திட்டமும் ஒன்றாகும்.
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-பின் மூலம் பல்வேறு தொழில்துறைகளில் MISI 6,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்குப் பயிற்சிகளை வழங்குகிறது.
அவ்வகையில் இந்த Acting for Film Workshop ஒரு வார திரைப்பட நடிப்புப் பட்டறையானது, பங்கேற்பாளர்களுக்கு திரைப்பட நடிப்பின் அத்தியாவசிய நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிரமான, நடைமுறை நிகழ்ச்சியாகும்.
இப்பயிற்சி பட்டறை திரைப்பட நடிப்பு மற்றும் காட்சி ஆய்வு என இரண்டு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தியது.இவை இரண்டும் பங்கேற்பாளர்களுக்கு காட்சிகளைப் படமாக்குவதில் நடைமுறை கேமரா அனுபவத்தையும் வழங்கின.
குறுகியக் காலத்தில் ஏராளமான உள்ளடக்கத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், திரைப்படத்திற்கான நடிப்புக் கலை மற்றும் ஒழுக்கத்தில் முழுமையாக ஒன்றித்துப் போவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பையும் வழங்கியது.
இதனிடையே இந்த ஒரு வார கால பயிற்சி முடிந்து நேற்று சைபர்ஜெயா பல்கலைக் கழகத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் இந்தியாவிலிருந்து பிரபல நடிகை கௌதமி சிறப்பு வருகை புரிந்து, பங்கேற்பாளர்களுக்கு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்ததோடு, சினிமா அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
சைபர்ஜெயா பல்கலைக்கழக வேந்தர் Tan Sri Dr.Norhisham Abdullah, இணை வேந்தத் Tan Sri Dr.Palan, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி டத்தோ விக்கினேஸ்வரன் ஆகியோருடன் உள்ளூர் பிரபலங்களான நடிகரும் தயாரிப்பாளருமான டெனிஸ், நடிகை சங்கீதா, இயக்குநர் விமலா பெருமாள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஒரு வாரம் கற்றுக் கொண்டதை, பங்கேற்பாளர்கள் பிரமுகர்கள் முன்னிலையில் படைப்பாகவும் வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்ப்பட்டனர்