Latestமலேசியா

ஜாலான் கூச்சாய் லாமா விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி; dashcam உரிமையாளரைப் போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், டிசம்பர்-16 – டிசம்பர் 8-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் நிகழ்ந்த கோர விபத்து குறித்த விசாரணைக்கு, விபத்தை பதிவுச் செய்த dashcam உரிமையாளரைப் போலீஸ் தேடுகிறது.

 

விடியற்காலையில், ஸ்ரீ பெட்டாலிங்கிலிருந்து பழைய கிள்ளான் சாலை நோக்கிச் சென்ற Honda City காரால் மோதப்பட்டு, Honda RS150 மோட்டார் சைக்கிளோட்டி படுகாயமடைந்தார்.

 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 25 வயது அவ்விளைஞர், மறுநாள் காலை உயிரிழந்தார்.

 

38 வயது காரோட்டியும் விபத்து குறித்து போலீஸில் புகார் செய்தார்.

 

இந்நிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்த போலீஸ், விசாரணை அறிக்கையை நிறைவுச் செய்யும் நிலையில் உள்ளது.

 

அதற்கு, விபத்துக்குப் பிறகு வைரலான dashcam பதிவு அவசிமாவதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் கூறியது.

 

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மரணமடைந்த Muhammad Harish Aiman Mat Zahid, ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!