
பத்து பஹாட், செப்டம்பர் 2 – பத்து பஹாட் பாரிட் ராஜாவில் நடைபெற்ற கூடா கெப்பாங் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய ‘ஜின் சடங்கு’ வழக்கில் மூவர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாத சிறைத்தண்டனையும் தலா 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறினால், குற்றவாளிகள் மேலும் 14 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் அபராதத்தைச் செலுத்தினர்.
கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பாரிட் ராஜாவிலுள்ள இல்லம் ஒன்றில் நடைபெற்ற குற்றச்சாட்டில் அவ்விருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று அச்சம்பவக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஜோகூர் இஸ்லாமிய மதத் துறை (JAINJ) விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சடங்கு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.