
ஜூரு, டிசம்பர்-30 – பினாங்கு, ஜூருவில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 9,000 கோழிகள் கருகி மாண்டன.
நேற்றிரவு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
எனினும், தீ வேகமாக பரவியதால், பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான கோழிகளை காப்பாற்ற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
தீ பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்பட்ட சேதத்தின் அளவும் மதிப்பிடப்பட்டு வருகிறது.



