குவாலா லங்காட், டிசம்பர்-17 – சிலாங்கூர், ஜெஞ்சாரோமில் பேரங்காடியில் பெண்ணொருவரின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்ற ஆடவன் தேடப்படுகிறான்.
வைரலான அவனது அநாகரிகச் செயல் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளதாக, குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் அக்மாரிசால் ரட்சி (Superintendan Mohd Akmalrizal Radzi) கூறினார்.
அவ்வாடவனின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு, பேரங்காடியின் CCTV கேமரா பதிவைப் பார்த்த போது அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, சந்தேக நபரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
100 ரிங்கிட் விதிக்கப்பட வாய்ப்புள்ள 1955-ஆம் ஆண்டு சிறு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழும் அவன் விசாரிக்கப்படுவான்.
தகவல் தெரிந்தோர் போலீசைத் தொடர்புகொண்டு உதவுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.