Latestமலேசியா

ஜெம்போலில் 11 வயது சிறுமி கற்பழிப்பு; குற்றச்சாட்டை மறுத்த நால்வர்

சிரம்பான், ஆக 29 – 11 வயது சிறுமியை கற்பழித்ததாக சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை நான்கு ஆடவர்கள் மறுத்தனர்.

கடந்த வாரம் ஜெம்போலில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக 21க்கும் 40 வயதுக்குமிடையிலான அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் டத்தின் Surita Budin முன்னிலையில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு தனித்தனியே வாசிக்கப்பட்டது.

ஆகஸ்டு 23ஆம்தேதி காலை 11 மணிக்கும் மாலை மணி 3.30க்குமிடையே அவர்கள் ஜெம்போல் Taman Meranti Bahau விலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

மேலும் அந்த நால்வரில் 21 வயதுடைய இளைஞன் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த ஜூன் மாதம் காலை மணி 11.30 அளவில் ஜெம்போல் Taman ACBEயிலுள்ள மைதானத்திற்கு முன் ஒரு புரோடுவா மைவி காரின் பின் இருக்கையில் கற்பழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டான்.

மேலும் ஆகஸ்டு 23 ஆம்தேதி காலை 11.30 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ஒரு வீட்டில் 12 வயதுடைய மற்றொரு சிறுமியையும் கற்பழித்தாக குற்றஞ்சாட்டப்பட்டான்.

மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய அந்த ஆடவனுக்கு 30,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு நிருபிக்கட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி வழங்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 376 (1) இன் கீழ் அவர்கள் அனைவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதர இருவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமினும் மற்றொரு ஆடவனுக்கு 5,000 ரிங்கிட் ஜாமினும் அனுமதிக்கப்பட்டது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு அக்டோபர் 15ம்தேதி மீண்டும் மறு வாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!