
ஜெர்மனி, செப்டம்பர் 10 – ஜெர்மனியின் தெற்குப் பகுதியான பவேரியாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இரவு நேரத்தில் வீட்டின் மணி அடிக்கடி ஒலித்தத்தில் அப்பகுதி குடியிருப்பாளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இரவு முழுவதும் மணியை அடித்து தொந்தரவு செய்தது ஒரு சிறிய நத்தை என்பதை அறிந்த அனைவரும் உண்மையிலேயே குபீரென்று சிரித்து விட்டனர்.
முதலில், குறும்புக் குழந்தைகள்தான் தொல்லை கொடுக்கிறார்கள் என்று தவறாக நினைத்திருக்கின்றார்கள் வீட்டின் குடியிருப்பாளர்கள்.
அந்த நத்தை, வீட்டின் மணியின் மீது ஏறி மேலேயும், கீழேயும் சறுக்கிச் செல்வதால், மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்ததைத் தொடர்ந்து பலர் நடு இரவில் தூக்கத்தில் இருந்து விழித்து, பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர்.
இறுதியில், உண்மையான ‘குற்றவாளி’ ஒரு சாதாரண நத்தை என்பதை அறிந்த குடியிருப்பாளர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.