Latestஉலகம்

ஜெர்மனி செல்லும் வழியில் காற்றுக் கொந்தளிப்பு; Lufthansa விமானத்தில் 11 பேர் காயம்

பெர்லின், நவம்பர்-13 – அர்ஜேன்டினாவின் Buenos Aires-சிலிருந்து ஜெர்மனியின் Frankfurt செல்லும் வழியில் Lufthansa நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் கடுமையானக் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில், 11 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஐவர் பயணிகள், அறுவர் விமானப் பணியாளர்கள் என விமான நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.

அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறக்கும் போது நிகழ்ந்த அச்சம்பவத்தில் மற்றபடி அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.

காயமடைந்த பயணிகளுக்கு உனடியாக சிகிச்சை வழங்கப்பட்டு, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை விமானம் போய் சேர வேண்டிய இலக்கில் பாதுகாப்பாக சென்றடைந்தது.

சம்பவத்தின் போது அந்த போயிங் 747-8 விமானம், 329 பயணிகளையும் 19 பணியாளர்களையும் ஏற்றியிருந்தது.

இதே போல் கடந்த மே மாதம் மியன்மார் நாட்டின் இராவாடி ஆற்றுப்படுகை மேலே பறக்கும் போது Singapore Airlines விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில், ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்; 30 பேர் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!