Latestசிங்கப்பூர்

சிங்கப்பூர் பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெர்ம்ஸ் பைகள் & தங்கக் கட்டிகள்; ஏலத்தில் விற்கப்படும்

சிங்கப்பூர், ஆகஸ்ட் 13 – சிங்கப்பூர் பணமோசடி வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தங்கக் கட்டிகளை சிங்கப்பூர் அரசு விரைவில் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளது.

ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டிடம் (Deloitte) 460 க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருட்களும், 58 தங்கக் கட்டிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பணமோசடி மற்றும் ஊழல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் உயர்தர ரியல் எஸ்டேட், ஆடம்பர கார்கள், ரொக்க தொகை ஆகியவை உள்ளடங்கும்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், ரிச்சர்ட் மில்லே (Richard Mille) மற்றும் படேக் பிலிப் (Patek Philippe) போன்ற பிரபல பிராண்டுகளின் கைக்கடிகாரங்கள், ஜேட் நெக்லஸ், ஹெர்ம்ஸ் கைப்பைகள், ஜப்பானிய கலைஞர் யாயோய் குசாமா (Yayoi Kusama) வடிவமைத்த லூயிஸ் வூட்டன் (Louis Vuitton) பைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கின் பின் நடவடிக்கையாக, உலகின் முன்னணி வங்கிகள் மீது சிங்கப்பூர் அரசு நிதி அபராதம் விதித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!