
ஜோகூர், டிசம்பர் 29 – கடந்த அக்டோபர் மாதம் ஜோகூர் Senai-Desaru நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஈ-ஹேலிங் ஓட்டுநர் இன்று நீதிமன்றத்தில் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டப்பட்ட அந்த ஆடவர் ஓட்டிய டோயோட்டா வாகனம் ஆபத்தாக ஓட்டப்பட்டதாகவும், அதனால் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இந்த வழக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சந்தேக நபர் மீது, 4,800 சட்டவிரோத சிகரெட்டுளை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப சுமை மற்றும் wheelchair -இல் இருந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வரும் அந்த ஈ-ஹேலிங் ஓட்டுனரின் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு 15,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்து அதுதாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.



