
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-27 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் 6 வயது சிறுவன் திஷாந்த் (Tishant) காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதலே மகனைக் காணவில்லை என, 36 வயது தந்தை முனிசாமி போலீஸில் புகார் செய்துள்ளார்.
திஷாந்த், 110 சென்டி மீட்டர் உயரமும் 19 கிலோ கிராம் எடையும் சற்று கருத்த தோல் நிறத்தையும் கூர்மையான மூக்கையும் கொண்டவன் என அடையாளம் கூறப்பட்டது.
அவன் கடைசியாக புக்கிட் இண்டா, Kopitiam Tiong Nam காப்பிக் கடையில் காணப்பட்டதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் தெரிவித்தார்.
எனவே அச்சிறுவன் இருக்கும் இடம் தெரிந்தாலோ அல்லது வெளியில் எங்கும் அவனைக் கண்டாலோ, உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொளௌளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.